கிரிக்கெட்

‘உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு’ - வெங்சர்க்கார் + "||" + Vengsarkar says India has ‘chance’ to lift World Cup

‘உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு’ - வெங்சர்க்கார்

‘உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு’ - வெங்சர்க்கார்
உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் மும்பையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வெல்ல மிகச்சிறப்பான வாய்ப்பு உள்ளது. குறைந்தது 4 அணிகளில் ஒன்றாக அரைஇறுதிக்கு தகுதி பெற்று விடுவார்கள். இறுதிப்போட்டியை பொறுத்தவரை என்னால் கணிக்க முடியாது’ என்றார்.


மற்றொரு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பையை வெல்வதற்கு இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர்கள் விளையாடி வரும் விதத்தை வைத்து இதை சொல்கிறேன். இங்கிலாந்து அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களிடம் நிறைய நம்பிக்கை உள்ளது. சமீப காலங்களில் அவர்கள் வியப்புக்குரிய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கடந்த சில உலக கோப்பை போட்டிகளில் உள்ளூர் அணிகள் மகுடம் சூடியிருப்பதையும் மறந்து விடக்கூடாது. உள்ளூர் சீதோஷ்ண நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும்’ என்றார்.