உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் துணைகேப்டனாக கெய்ல் நியமனம்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் துணைகேப்டனாக கெய்ல் நியமனம்
x
தினத்தந்தி 7 May 2019 9:30 PM GMT (Updated: 2019-05-08T02:43:00+05:30)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது.

கயானா,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி பங்கேற்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள 39 வயதான அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை துணைகேப்டனாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இது குறித்து கெய்ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக எந்த வடிவிலான ஆட்டத்தில் ஆடினாலும் அது கவுரவத்துக்குரியது. இந்த உலக கோப்பை போட்டி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு சீனியர் வீரராக கேப்டன் மற்றும் அணியில் உள்ள அனைவருக்கும் ஆதரவு அளிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. உலக கோப்பை போட்டி குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் மக்களுக்காக உலக கோப்பை போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story