கிரிக்கெட்

தோனிக்கு உதவி பண்ணுங்கப்பா...சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி + "||" + Shout out to Professor Vignesh at iitmadras for making exams relevant to important, real-life issues!

தோனிக்கு உதவி பண்ணுங்கப்பா...சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி

தோனிக்கு உதவி பண்ணுங்கப்பா...சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி
சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
நடைபெற்று வரும் 12வது ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து, பிளேஆப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த தொடரில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பெங்களூரு அணியிடமிருந்தே அறிந்து கொள்ள முடியும். 

14 லீக் ஆட்டங்களில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியால் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே டாஸ் வெல்ல முடிந்தது. இரவு நேர பனிப்பொழிவு ஆட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்வதும் முக்கியத்துவம் பெரும் என்ற சூழலில் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த முக்கியத்துவத்தையும், சமீபத்திய ட்ரெண்டிங்குகளையும் கணக்கில் கொண்டு சென்னை IIT-M நடத்திய செமஸ்டர் தேர்வில் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மெட்டீரியல் & எனர்ஜி பேலன்ஸ் பாடப்பிரிவின் செமஸ்டர் தேர்வு கடந்த மே 6ம் தேதியன்று நடைபெற்றது, இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

“பகலிரவு ஆட்டங்களில் பனிப்பொழிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அவுட்பீல்டில் பந்து செல்லும் போது பந்து ஈரமாவதன் காரணமாக ஸ்பின்னர்களுக்கு சரியான க்ரிப் கிடைக்காமலும், பந்தை சரிவர சுழல வைக்க இயலாமல் போகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ சரியான இலக்கில் பந்தை வீச முடியாமல் போகிறது. 

இது பீல்டிங் செய்யும் அணிக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மே-7ம் தேதி முதலாவது குவாலிபையர் ரவுண்டில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டி தொடங்கும் போது 39 டிகிரியாக இருக்கும் வெப்பநிலை இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் 27 டிகிரியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் சென்னை கேப்டன் டோனி டாஸ் வென்றால், அவரை முதலில் பேட்டிங் தேர்வு செய்ய அறிவுறுத்துவீர்களா அல்லது பீல்டிங் செய்ய கூறுவீர்களா?” என்று 5 மதிப்பெண்கள் கொண்ட அந்த கேள்வி உள்ளது.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த வினாத்தாளை பதிவிட்டு, இந்த வினாத்தாளை தயாரித்த சென்னை IIT-M தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் விக்னேஷை வெகுவாக பாராட்டியுள்ளது.

இருப்பினும் மே 7ம் தேதி மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார். இப்போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, மும்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
3. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக விளையாடிய முழுநேர மாற்று வீரர்!
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்!
4. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன? - பரபரப்பு தகவல்கள்
கடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்
இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.