கிரிக்கெட்

120 நொடிகளில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி டிக்கெட் : ரசிகர்கள் அதிருப்தி + "||" + Selling in 120 seconds The teams. Final match ticket Fans are dissatisfied

120 நொடிகளில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி டிக்கெட் : ரசிகர்கள் அதிருப்தி

120 நொடிகளில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி டிக்கெட் : ரசிகர்கள் அதிருப்தி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், கள்ளச்சந்தைக்கு வழிவகுத்து கொடுத்திருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் வரும் 12ஆம் தேதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடக்கிறது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதி உள்ளது. ஆயிரம் ரூபாயில் தொடங்கி 22 ஆயிரம் ரூபாய் வரை 9 வகையிலான டிக்கெட்டுகள் உள்ளன.

இ-டிக்கெட் விற்பனையானது ஈவெண்ட்ஸ் நவ் என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று அந்த நிறுவனம் இ-டிக்கெட் விற்பனையை தொடங்கிய 2 நிமிடங்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து விட்டதாக அறிவித்தது. இது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. கள்ளச்சந்தை நுழைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.