கிரிக்கெட்

இங்கிலாந்து–பாகிஸ்தான் மோதிய முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து + "||" + England-Pakistan crash First one day cricket match canceled by rain

இங்கிலாந்து–பாகிஸ்தான் மோதிய முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து–பாகிஸ்தான் மோதிய முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து
பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

லண்டன், 

பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்தத்தால் அந்த ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. பஹர் ஜமான் 3 ரன்னும், பாபர் அஜாம் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்–ஹக் 42 ரன்னுடனும், ஹாரிஸ் சோகைல் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இவ்விரு அணிகள் இடையேயான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை நடக்கிறது.