கிரிக்கெட்

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி + "||" + 3 Countries Cricket: West Indies team win

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது.

டப்லின், 

வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் டப்லினில் நேற்று முன்தினம் நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்–அயர்லாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 135 ரன்னும், பால் ஸ்டிர்லிங் 77 ரன்னும், கெவின் ஓ பிரைன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 126 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 148 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் அம்ரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2–வது முறையாக அயர்லாந்தை வீழ்த்தி இருக்கிறது. இன்று 5–வது லீக் ஆட்டம் நடக்கிறது. இதில் வெஸ்ட்இண்டீஸ்–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.