கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + Women's 20 over cricket: Super Novas team 'champion'

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி ‘சாம்பியன்’

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி ‘சாம்பியன்’
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.

ஜெய்ப்பூர், 

3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி–ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெலா சிட்டி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுஷ்மா வர்மா 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் ராதா யாதவ் பவுண்டரி விளாசி அணிக்கு திரில் வெற்றியை தேடிக்கொடுத்தார். அதிகபட்சமாக 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்த சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகி விருது பெற்றார். சூப்பர் நோவாஸ் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடர்நாயகி விருதை தட்டிச் சென்றார்.