பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 14 May 2019 10:57 PM GMT (Updated: 14 May 2019 10:57 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

பிரிஸ்டல்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 131 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக ஆசிப் அலி 52 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 41 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், டாம் குர்ரன் 2 விக்கெட்டும், பிளங்கெட், டேவிட் வில்லி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 128(93) ரன்களும், ஜேசன் ராய் 76(55) ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

Next Story