கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி!! + "||" + ICC releases official World Cup 2019 song

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி!!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
லண்டன்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும். 

முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் வரும் 24 ஆம் தேதி விளையாடுகிறது. உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை ஜூன் 5 ஆம் தேதி எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி லோரின் பாடியிருக்கிறார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.
3. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.