கிரிக்கெட்

உலக கோப்பை போட்டி: பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள் + "||" + ICC World Cup 2019: 4 spinners who can trouble the batsmen

உலக கோப்பை போட்டி: பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்

உலக கோப்பை போட்டி: பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்
உலக கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு 4 சுழல்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலககோப்பை போட்டியில் சுழல்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமனதாக இருக்கும்,  ஏனெனில் அங்கு நிலவும் உலர்ந்த ஆடுகளங்கள் மற்றும் வெப்பமான காலநிலை போன்ற  காரணிகளால் சுழல் பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்

இந்த  உலககோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நான்கு சுழல்பந்து வீச்சாளர்களின் தொகுப்பு 

ரஷீத் கான்

உலகக் கிரிக்கெட்டில் தலைசிறந்த லெக் ஸ்பின்னரான இவர் ஆப்கானிஸ்தான் அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரது விளையாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளது. உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரஷித், தற்போது சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு இவர் முக்கிய காரணமாகும். இவர் நிச்சயமாக எதிர் அணியின் பேட்ஸ்மேன்களூக்கு சவாலாக இருப்பார். ஐ.பி.எல் 2019-ல் 15 போட்டிகளில்  விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது கூறிப்பிடதக்கது

ஆட்டம் - 56
விக்கெட்டுகள் -123
எகானமி -3.91

குல்தீப் யாதவ்

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டுகளில்  ஒன்றாக இந்த  குல்தீப் யாதவ்  இருப்பார் என கருதப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள்  தொடரில்  மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது.

மொத்தம்  44 ஒருநாள் போட்டிகளில் 85 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்திப் யாதவ், சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில்  பார்மில்  இல்லை. ஐ.பி.எல். 2019 ல், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது.  இருப்பினும் இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும்  விக்கெட் வேட்டை நடத்துவார் என நம்பலாம்

ஆட்டம் - 44
விக்கெட்டுகள் -87
எகானமி -4.94

இம்ரான் தாஹிர்

தனது முதல் கோப்பை வெல்ல நினைக்கும் தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு முக்கிய பங்கு அளிக்க கூடியவர், இது இவரது கடைசி உலகக் கோப்பை  தொடராகும். அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் அணிக்காக  விக்கெட் எடுக்ககூடியவர். மேலும் இவரது அனுபவம் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். 

40 வயதான இவர் 98 ஒருநாள் போட்டிகளில்  162 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இம்ரான் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை விழ்த்தியவர்களில் முதல் இடத்தை பிடித்து நல்ல பார்மில்  உள்ளது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.

ஆட்டம் - 98
விக்கெட்டுகள் -162
எகானமி - 4.63

ஷகிப் அல் ஹசன்

32 வயதான இவர் வங்காள தேச அணியின்  மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார். வங்கதேச அணியின் அனைத்துவித போட்டிகளிலும் வெற்றிகரமான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அனுபவம் மிகுந்த பந்துவீச்சு  எதிர்அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பாக்கலாம். மிடில் ஓவர்களில்  விக்கெட் எடுக்கும் திறன் உடையவர். இருப்பினும், ஷகிப் சமீப காலங்களில் காயத்தால் அவதிப்படுவது கவலைக்குரியதாக காணப்படுகிறது

ஆட்டம் - 198
விக்கெட்டுகள் -249
எகானமி -4.44