கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் - ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு + "||" + 3 players in the England squad for World Cup cricket change - Opportunity for Jopra Archer

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் - ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் - ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உத்தேச அணியில் இடம் பெற்று இருந்த டேவிட் வில்லி, ஜோ டென்லி, அலெக்ஸ் ஹாலெஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சரின் தந்தை இங்கிலாந்துக்காரர், தாய் வெஸ்ட்இண்டீசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கழற்றி விடப்பட்ட அலெக்ஸ் ஹாலெஸ் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர் ஆவார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-


இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் குர்ரன், லியாம் டாசன், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.
3. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.