உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...


உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...
x
தினத்தந்தி 22 May 2019 7:26 AM GMT (Updated: 22 May 2019 7:26 AM GMT)

உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்

உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் 4 ஆல் ரவுண்டர்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. 
மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. 

கோப்பையை வெல்ல ஒவ்வொரு அணியும் கடுமையாக போட்டி போடும் இருப்பினும்  ஒரு அணியின் வெற்றிக்கு சம நிலை மிகவும் முக்கியமானது. அவ்வாறு அணிக்கு  சம நிலையை தருவதில் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் கலக்க காத்திருக்கின்றனர்.

ஆல் ரவுண்டர்களின் தொகுப்பு

ஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்)

நடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் சிறந்த  வீரர்களில் ஒருவரான 31 வயதான ஆண்ட்ரே ரசல் 58 ஆட்டங்களில் அவர் 130 சிக்சர்ஸ் விளாசிய இவர் தான் எதிர் கொள்ளும் ஐந்து பந்துகளுக்கு ஒரு சிக்சர்ஸ் என்ற விதத்தில்  சிக்சர்களை விளாசிய தள்ளியுள்ளார் . ரசல் ஒரு பயனுள்ள நடுத்தர வேகமாக பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டரும் ஆவார். இந்த பார்ம் உலக கோப்பையிலும்  தொடர்ந்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆட்டங்கள்  -52
ரன்கள் - 998
விக்கெட்கள் - 65

ஹர்திக் பாண்டியா (இந்தியா)

இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக வளர்ந்து வரும் 25 வயதான  இவரின்  அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு ரன்கள் நிச்சயமாக கிடைக்கும். மேலும் அவரைப் போன்று அதிரடியாக பேட்டிங் செய்து பந்துவீச்சிலும் குறிப்பிடும்படி செயல்படும் வீரர் தற்போது இந்திய அணியில் இல்லை என்றே கூற வேண்டும்.  நடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 402 ரன்களை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 191, அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் நல்ல பார்ம்ல் உள்ளதால்  இந்திய அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்.

ஆட்டங்கள்  -45
ரன்கள் - 731
விக்கெட்கள் - 44
 
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

 27 வயதான பென் ஸ்டோக்ஸ் இவர் பிரிஸ்டல் நைட் கிளப் சர்ச்சையில் சிக்கி அணிக்கு திரும்பியதிலிருந்து  பேட்டிங்  மற்றும்  பந்துவீச்சில் தன்னை மெருகேற்றி உள்ளார்.  அண்மை காலமாக இவரது  பீல்டிங் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. சொந்த மண்ணில்  விளையாடுவது இவருக்கு மேலும் பலம் சேர்க்கும்,

ஆட்டங்கள்  -83
ரன்கள் - 2196
விக்கெட்கள் - 63

மார்கஸ் ஸ்டொனிஸ் (ஆஸ்திரேலியா):

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக வளர்ந்து வருபவர்  29 வயதான மார்கஸ் ஸ்டொனிஸ் . இவர் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் யார்கர், ஷார்ட் பால் என வெவ்வெறு  பந்துகளை வீசி , வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.  சுழ்நிலைக்கு ஏற்ப டெக்கனிக்கல் ஷாட்ஸ் அடிப்பதில் கைதேர்ந்தவர் . டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வருகை இவரை மேலும் மெருகேற்றும் என எதிர் பார்க்கலாம்.

ஆட்டங்கள்  -33
ரன்கள் - 963
விக்கெட்கள் - 26

Next Story