பயிற்சி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு


பயிற்சி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 26 May 2019 8:36 PM GMT (Updated: 26 May 2019 8:36 PM GMT)

பயிற்சி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு

பிரிஸ்டல்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பிரிஸ்டலில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்த போது, இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது அம்லா 51 ரன்களுடனும், குயின்டான் டி காக் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் இந்த பயிற்சி ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. கார்டிப்பில் நடக்க இருந்த பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

இன்றைய பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் சவுதம்டனிலும், இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் லண்டனிலும் சந்திக்கின்றன. இரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Next Story