கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை நிராகரித்த ஜெயவர்த்தனே + "||" + Jayawardene rejected the invitation of Cricket Board

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை நிராகரித்த ஜெயவர்த்தனே

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை நிராகரித்த ஜெயவர்த்தனே
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆலோசகர் உள்ளிட்ட ஏதாவது வகையில் பங்களிப்பை அளிக்க வருமாறு கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
கொழும்பு,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆலோசகர் உள்ளிட்ட ஏதாவது வகையில் பங்களிப்பை அளிக்க வருமாறு கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இலங்கையில் முதல்தர கிரிக்கெட்டை மேம்படுத்த ஜெயவர்த்தனே உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த ஜெயவர்த்தனே, தனக்கு என்று சில வேலைகள் இருப்பதாக கூறி தற்போதைய அழைப்பை நிராகரித்து விட்டார்.