‘ரசிகர்களின் கிண்டல் பற்றி கவலையில்லை’- சுமித்


‘ரசிகர்களின் கிண்டல் பற்றி கவலையில்லை’- சுமித்
x
தினத்தந்தி 26 May 2019 9:45 PM GMT (Updated: 26 May 2019 8:42 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டன், 

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 116 ரன்கள் விளாசினார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்து அணிக்கு திரும்பியிருக்கும் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் களம் கண்ட போது, ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் ‘ஏமாற்றுக்காரர்’ என்று கேலி செய்து உரக்க கத்தினர்.

இது குறித்து ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘நான் மைதானத்திற்கு வந்த போது ரசிகர்கள் தேவையில்லாத சில வார்த்தைகளை பயன்படுத்தியதை நானும் கேட்டேன். அது பற்றி கண்டுகொள்ளாமல் களத்தில் எனது பணியை செய்தேன். அதிர்ஷ்டவசமாக சதம் அடித்து அணிக்கு எனது பங்களிப்பை அளித்தேன். சக வீரர்களின் ஆதரவு இருக்கும் வரை ரசிகர்களின் கிண்டல் பற்றி எனக்கு கவலையில்லை. களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டும், ஆஸ்திரேலிய மக்கள் பெருமைப்படும் வகையில் முடிந்த அளவுக்கு எனது சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். அது தான் எனது நோக்கம்’ என்றார்.

Next Story