கிரிக்கெட்

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு - மெக்ராத் கருத்து + "||" + Great opportunity for the England team to win the World Cup - McGrath commented

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு - மெக்ராத் கருத்து

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு - மெக்ராத் கருத்து
உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.


இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு மெக்ராத் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்
இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.
2. உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - அஸ்வின் நம்பிக்கை
உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இங்கிலாந்தில் தொடங்குகிறது.
4. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
5. உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு - யுஸ்வேந்திர சாஹல் சொல்கிறார்
உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.