கிரிக்கெட்

ஆஸ்திரேலிய பவுலருக்கு உதவிய மலிங்கா + "||" + Helped the Australian Bowler Malinga

ஆஸ்திரேலிய பவுலருக்கு உதவிய மலிங்கா

ஆஸ்திரேலிய பவுலருக்கு உதவிய மலிங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விதவிதமாக பந்து வீசுவது முக்கியம்.

லண்டன், 

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விதவிதமாக பந்து வீசுவது முக்கியம். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா) என்னை சந்தித்து நீங்கள் எப்படி பந்து வீசுகிறீர்கள், அதை அறிய ஆசைப்படுகிறேன் என்று கூறினார். நானும் அவருக்கு அது பற்றி கூறி ஆலோசனைகளை வழங்கினேன். பந்து வீச்சு தொடர்பாக யார் என்னிடம் வந்து உதவி கேட்டாலும் சொல்லி கொடுப்பேன்’ என்றார்.