கிரிக்கெட்

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும் வார்னே நம்பிக்கை + "||" + World Cup Warne believes Australia win the match

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும் வார்னே நம்பிக்கை

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும் வார்னே நம்பிக்கை
உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.

லண்டன், 

உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.

வார்னே கருத்து

உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ஆஸ்திரேலிய அணியை போல் எந்த இடத்திலும், எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஒரு நாள் போட்டியில் அவர்கள் சமீபகாலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். ஆஸ்திரேலிய அணி கடந்த உலக கோப்பையை வென்றது. கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4–ல் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் பட்டம் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

ஓய்வு குறித்து டோனிக்கு தெரியும்

உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகள் எவை என்று என்னிடம் கேட்டால் இந்தியா, இங்கிலாந்து என்று தான் சொல்வேன். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் சரியான நேரத்தில் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோர் திரும்பி இருப்பது ஆஸ்திரேலிய அணியை மிகவும் வலுப்படுத்தி இருக்கிறது. ஸ்டீவன் சுமித் மிகச்சிறந்த வீரர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை திரும்பி பார்த்தால் உலகின் டாப்–5 வீரர்களாக விராட்கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோர் விளங்கினார்கள். அதில் 2 பேர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவர்கள். தடை காரணமாக ஒரு ஆண்டு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் விளையாட முடியாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும்.

இந்திய கிரிக்கெட்டின் அருமையான வீரர் டோனி. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக பெருமைகளை சேர்த்து இருக்கிறார். டோனி இல்லாத உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் டோனி இடம் பிடித்து இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது ஓய்வு குறித்து யாரும் எதுவும் நினைக்க வேண்டியதில்லை. ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்பது டோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது அவரே முடிவு எடுப்பார். தற்போது டோனி நல்ல நிலையில் இருக்கிறார்.

இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.