கிரிக்கெட்

விராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு + "||" + captains meet queen elizabeth before the commencement of cwc19

விராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு

விராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு
விராட் கோலி உள்பட உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்து ராணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லண்டன்,

12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா , இங்கிலாந்து உள்பட 10 முன்னணி அணிகள் இந்த போட்டித்தொடரில் பங்கேற்கின்றன. 

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் நேற்று இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைப்பின் பேரில் சென்றனர். 

இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி ஆகியோரை கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இங்கிலாந்து அரண்மனைக்கு கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் சென்ற புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.