கிரிக்கெட்

தெண்டுல்கரின் 2–வது இன்னிங்ஸ் வர்ணனையாளர் பணியை தொடங்கினார் + "||" + Tendulkar's 2nd innings The commentator started work

தெண்டுல்கரின் 2–வது இன்னிங்ஸ் வர்ணனையாளர் பணியை தொடங்கினார்

தெண்டுல்கரின் 2–வது இன்னிங்ஸ் வர்ணனையாளர் பணியை தொடங்கினார்
உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர் 2013–ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

லண்டன், 

உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர் 2013–ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த நிலையில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது 2–வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இணைந்து இருக்கிறார். லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் தெண்டுல்கர் வர்ணனையாளர் பணியை கவனித்தார். மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நின்றபடி அவர் ஆட்டம் குறித்து தெரிவித்த வர்ணனை டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது.