கிரிக்கெட்

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை–சர்ப்ராஸ் அகமது + "||" + Did not perform well in the padding Sarbrah Ahmad

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை–சர்ப்ராஸ் அகமது

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை–சர்ப்ராஸ் அகமது
தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘இங்குள்ள சூழ்நிலையில் டாஸ்சை இழந்தாலும், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவது கடினமானதாகும்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘இங்குள்ள சூழ்நிலையில் டாஸ்சை இழந்தாலும், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவது கடினமானதாகும். இங்கு நம்பிக்கையுடன் ஆட வேண்டியது முக்கியமானதாகும். பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்து வீச்சு சவாலாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஷாட் பிட்ச் பந்து வீச்சை நாங்கள் நன்றாக ஆடவில்லை. இன்று எங்களுக்கு மோசமான நாள். எங்கள் அணி சரிவில் இருந்து மீண்டும் வரும் என்று நம்புகிறேன். முகமது அமிர் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது நல்ல அறிகுறியாகும்’ என்று தெரிவித்தார்.

வெற்றிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் அளித்த பேட்டியில், ‘எங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியபடி விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஒஷானே தாமஸ், ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதிக ரன்கள் குவிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானதாகும். கெய்ல் அருமையாக பேட்டிங் செய்தார். நாங்கள் நினைத்தபடி வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.