கிரிக்கெட்

விராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி + "||" + Immature Virat Kohli can't take abuse: South African speedster Kagiso

விராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி

விராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி
விராட் கோஹ்லி பக்குவமற்றவர் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் வருகிற 5ந்தேதி சவுதாம்ப்டன் நகரில் விளையாடுகின்றன.  இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகளுடன் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 3வது போட்டியாக இந்தியாவுடன் விளையாடுகிறது.

ஐ.பி.எல். 2019 போட்டியில் விராட் கோஹ்லியுடன் விளையாடிய அனுபவம் பற்றி தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடாவிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், ஆடுகளத்தில் பல நேரங்களில் விராட் கோஹ்லியின் வாய் மற்றும் பேட் பெருமளவில் பேசி கொண்டிருக்கும்.  பேட்டிங் செய்வதை விட அவரது ஆக்ரோஷம் அதிகளவில் இருக்கும்.

அவர் களத்தில் விளையாடும்பொழுது யார் மீதேனும் கோபப்படுவார்.  ஆனால் எதிரேயுள்ள நபர் பதிலுக்கு அதே கோபத்தினை வெளிப்படுத்தினால் அதனை கோஹ்லியால் ஏற்று கொள்ள முடியாது.

உண்மையில், போட்டியின் திட்டம் பற்றி நான் யோசித்து கொண்டு இருந்தேன்.  ஆனால், நான் அடித்த பவுண்டரிக்காக என் மீது மோதி விட்டு வார்த்தை ஒன்றை கூறி சென்றார்.  அதே பதிலை நீங்கள் அவருக்கு திருப்பி தரும்பொழுது, அவர் கோபமடைந்து விடுவார்.

அவரை புரிந்து கொள்வது கடினம்.  அவரது அணுகுமுறை அவர் பக்குவமற்றவர் என எடுத்து காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  அவர் தனித்துவம் நிறைந்த விளையாட்டு வீரர்.  ஆனால் அவரை திருப்பி திட்டும்பொழுது அதனை அவரால் ஏற்று கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகல்
இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.