கிரிக்கெட்

‘பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாது’ ரெய்னா பேட்டி + "||" + Pakistan can not defeat Indian team Interview with Raina

‘பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாது’ ரெய்னா பேட்டி

‘பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாது’ ரெய்னா பேட்டி
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்திய வீரர்கள் தற்சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து சிந்தித்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். ஏனெனில் தொடக்க கட்ட ஆட்டங்களில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். முதல் மூன்று லீக் ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு (16–ந்தேதி) எதிராகவும் நமது சாதனைக்குரிய வெற்றிப்பயணமும் தொடரும். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியாது. அதே சமயம் சில ஆட்டங்களில் இந்தியா தோற்றால் பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் மிகுந்த நெருக்கடிக்குள்ளானதாக மாறி விடும்.

தரமான வீரர்களுடன் இந்தியா சிறந்த அணியாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நமது வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இந்த உலக கோப்பையில் மொத்தம் 9 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருப்பதால், சிறப்பான தொடக்கம் முக்கியமானதாகும். இங்கிலாந்து அணி வெற்றியுடன் இந்த உலக கோப்பை தொடரை தொடங்கி இருக்கிறது. இதே போல் இந்திய அணியும் முதல் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டால், அதன் பிறகு இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த உலக கோப்பையில் முக்கியமான வீரராக இருப்பார். நெருக்கடியான தருணத்தில் டோனியின் அனுபவமும் கைகொடுக்கும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது தவறு -இம்ரான்கான்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.
2. ”மோடி-டிரம்ப் உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை” -பாகிஸ்தான் மந்திரியின் வயிற்றெரிச்சல் விமர்சனம்
மோடி-டிரம்ப் உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை என்று வயிற்றெரிச்சலில் பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளார்.
3. பாகிஸ்தானில் கோர விபத்து: மலையில் பஸ் மோதி 26 பேர் சாவு
பாகிஸ்தானில் மலையில் பஸ் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
4. ”விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது” பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் குற்றச்சாட்டு
விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது அவர்கள் தரக்குறைவாக நிற்கும்போது நாம் உயருவோம் என பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறினார்.
5. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.