கிரிக்கெட்

‘அடுத்த ஆட்டத்திற்குள் உடல்தகுதியை எட்டிவிடுவேன்’– ரஸ்செல் + "||" + 'Within the next game I'll be able to get into the field '-Russell

‘அடுத்த ஆட்டத்திற்குள் உடல்தகுதியை எட்டிவிடுவேன்’– ரஸ்செல்

‘அடுத்த ஆட்டத்திற்குள் உடல்தகுதியை எட்டிவிடுவேன்’– ரஸ்செல்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் 3 ஓவர் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 4 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் 3 ஓவர் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 4 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் போது அவர் கால் முட்டி காயத்தால் அவதிப்பட்டார்.

இது குறித்து 31 வயதான ரஸ்செல் கூறுகையில், ‘சில ஆண்டுகளாகவே கால்முட்டியில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இந்த காயத்துடன் தான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். சில சமயம் காயத்தன்மை மோசமாகி விடும். அதில் இருந்து மீண்டு வருவது எப்படி என்பது எனக்கு தெரியும். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 9 விக்கெட் சரிந்த போது, களத்தை விட்டு வெளியேறி கால் முட்டி வலிக்கு சிறிய அளவில் சிகிச்சை பெற்றேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்திற்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன. அதற்குள் எனது கால்முட்டியை இயல்பான நிலைக்கு கொண்டு வந்து விடுவேன். உடல்தகுதியை எட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவேன்’ என்றார்.