10 நல்ல பந்து வீசினால் போதும்; இங்கிலாந்து காலியாகி விடும் பாகிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளர் பேட்டி


10 நல்ல பந்து வீசினால் போதும்; இங்கிலாந்து காலியாகி விடும் பாகிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளர் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 9:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:33 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சிறப்பாக கையாளவில்லை.

நாட்டிங்காம்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மக்மூத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சிறப்பாக கையாளவில்லை. இங்கிலாந்து பவுலர்களும் இதே ‘யுக்தி’யை கையில் எடுப்பார்கள் என்பதை அறிவோம். அதை சமாளிப்பதற்கு நாங்கள் நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம்.

இங்கிலாந்து அணியை எங்களால் வீழ்த்த முடியும். இதை அதிர்ச்சி தோல்வி என்று சொல்ல கூடாது. ஏனெனில் அவர்களை வீழ்த்துவதற்குரிய திறமை எங்களிடம் இருக்கிறது. கடைசியாக நாங்கள் இங்கிலாந்துடன் மோதிய ஒரு நாள் தொடரை எடுத்துக் கொண்டால், ஒன்றும் மோசமாக தோற்றுவிடவில்லை. எல்லா ஆட்டத்தையும் சேர்த்து அந்த தொடரில் அவர்கள் 1,430 ரன்களுக்கு மேல் குவித்தார்கள். நாங்கள் 1,370 ரன்கள் எடுத்தோம். அதாவது அவர்களை விட 70 ரன்கள் தான் குறைவாக எடுத்திருந்தோம்.

நாளைய ஆட்டம் (இன்று) 481 ரன்கள் குவித்து சாதனை படைக்கப்பட்ட ஆடுகளத்தில் நடக்கிறது. இந்த சாதனையை அவர்கள் முறியடிக்க வேண்டும் என்றால் 300 பந்துகளையும் எதிர்கொண்டு விளையாடியாக வேண்டும். ஆனால் அவர்களின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவதற்கு நாங்கள் 10 நல்ல பந்துகளை வீசினால் போதும். அதை செய்வதற்குரிய திறமை எங்களது வீரர்களிடம் இருக்கிறது.

இவ்வாறு அசார் மக்மூத் கூறினார்.


Next Story