‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு

‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு
x
தினத்தந்தி 2 Jun 2019 9:15 PM GMT (Updated: 2 Jun 2019 8:43 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்த்து ஆடிய போது அவருக்கும், பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உரசலை குறிப்பிட்டு ரபடா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

புதுடெல்லி,

களம் இறங்கி விட்டால் எந்த மாதிரி செயல்படுவது என்ற திட்டமிடல் மட்டுமே எனது சிந்தனையில் எப்போதும் இருக்கும். ஆனால் அந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து விட்டு என்னை வெறுப்பேற்றும் வகையில் ஒரு வார்த்தை சொன்னார். நான் பதிலடி கொடுத்ததும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றைய ஆட்டம் முழுவதும் களத்தில் அவர் கோபத்துடனே காணப்பட்டார். எனக்கு இது போன்ற வீரர்களை பிடிப்பதில்லை. என்னை பொறுத்தவரை விராட் கோலி பக்குவமில்லாத ஒரு முதிர்ச்சியற்ற வீரர். இவர் எதிரணி வீரர்களை சீண்டலாம். மற்றவர்கள் இவரை விமர்சிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அதே சமயம் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பேட்டிங்கின் தூணாக அவர் இருக்கிறார்.

இவ்வாறு ரபடா கூறியுள்ளார்.

Next Story