கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல் + "||" + World Cup 2019: Massive Injury Setback For South Africa As Lungi Ngidi Is Ruled Out Of India Clash

தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்

தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், 

தென் ஆப்பிரிக்க அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 

வரும் ஜூன் 5 ஆம் தேதி, உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணியுடன் தென் ஆப்பிரிக்க அணி மோத உள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிக்கணக்கை துவங்கும் நோக்கில் தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் ஆர்வத்தில் உள்ளது. அதேவேளையில், இந்திய அணியும் உலக கோப்பை தொடரில் வெற்றியுடன் கணக்கை துவங்க ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்துள்ளார். காயம் காரணமாக நிகிடி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தசைபிடிப்பு காரணமாக நேற்று வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியின் போது பாதியில் நிகிடி வெளியேறினார். 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் 10 ஆம் தேதி  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2. இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தின் பழம் பெரும் நிறுவனம் திவால் -21 ஆயிரம் பேர் வேலை இழப்பு!
சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பிரிட்டிஷ் நிறுவனமான தாமஸ் குக் இன்று அதிகாலை திவால் ஆன நிலையில் 21 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
4. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் !
இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டு பிளசிஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
5. 2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது தென் ஆப்பிரிக்கா
இந்திய அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்க அணி நிர்ணையித்துள்ளது.