இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்குள் அம்லா தகுதி பெற்று விடுவார் தென்ஆப்பிரிக்க அணியின் டாக்டர் நம்பிக்கை


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்குள் அம்லா தகுதி பெற்று விடுவார் தென்ஆப்பிரிக்க அணியின் டாக்டர் நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2019 11:27 PM GMT (Updated: 3 Jun 2019 11:27 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

சவுதம்டன்,

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஹசிம் அம்லாவின் ஹெல்மெட்டில் தாக்கியது. இதனால் உடனடியாக வெளியேறிய ஹசிம் அம்லா பின்னர் களம் திரும்பினாலும் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ஹசிம் அம்லா விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்க அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு ஹசிம் அம்லா உடல் தகுதி பெற்று விடுவார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டாக்டர் முகமது மூசாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘மீண்டும் ஒரு முறை நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் ஹசிம் அம்லாவின் காயத்தின் தன்மை தெளிவாக தெரிந்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் 2-வது லீக் ஆட்டத்தில் அம்லாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு அவர் தயாராகி விடுவார். நிகிடிக்கு ஏற்பட்ட காயம் குணமடைய 7 முதல் 10 நாட்கள் பிடிக்கும் என்று தெரிகிறது. அவர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்திற்குள் (10-ந் தேதி) உடல் தகுதி பெற்று விடுவார் என்று நினைக்கிறோம். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஸ்டெயின் பயிற்சியின் போது பந்து வீசினார். உடல் தகுதியை பொறுத்து தான் அவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்’ என்றார்.

Next Story