கிரிக்கெட்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை + "||" + Bumrah called for random dope test

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சவுதாம்ப்டன்,

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.  அப்போது அங்கு வந்த சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தினர். 

ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாகவும், உலக அளவில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். பும்ராவிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்
பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறினார்.
2. கிரிக்கெட் வீரருடன் காதலா? - நடிகை அனுபமா
நடிகைகள் விளையாட்டு வீரர்களை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் சகஜம். கிரிக்கெட் வீரர் அசாருதீன் இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார். 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...