இங்கிலாந்து வீரர்கள் ஜாசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதம்


இங்கிலாந்து வீரர்கள் ஜாசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:30 PM GMT (Updated: 4 Jun 2019 11:30 PM GMT)

இங்கிலாந்து வீரர்கள் ஜாசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. 14-வது ஓவரின் போது கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் ஏமாற்றத்தில் தகாத வார்த்தையால் ஏதோ திட்டினார். அவரது மோசமான பேச்சு நடுவர்களுக்கு தெளிவாக கேட்டது. இதேபோல் 28-வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை ‘வைடு’ என்று அறிவித்த நடுவருடன் அவர் வாக்குவாதம் செய்தார். இது குறித்து நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஜாசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்தார். அத்துடன் அவர்கள் இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதற்காக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story