கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து + "||" + Sania Mirza greets Pakistan team

பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து

பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து
பாகிஸ்தான் அணிக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சானியா மிர்சா தனது டுவிட்டர் பதிவில், ‘சரிவில் இருந்து மீண்டு வந்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துகள். அவர்கள் எப்பொழுதும் கணிக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் மூலம் உலக கோப்பை போட்டி முன்பை விட அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை, சானியா திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அட்சதை தூவி வாழ்த்திய பொதுமக்கள்
மழை வேண்டி தவளைகளுக்கு நடந்த திருமணத்தில், அட்சதை தூவி பொதுமக்கள் வாழ்த்தினர்.
2. ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.
3. மாநில முன்னேற்றத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது; மே தின வாழ்த்து செய்தியில் நாராயணசாமி தகவல்
புதுவை மாநிலம் வேகமாக முன்னேறுவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது என்று மே தின வாழ்த்து செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
4. பிளஸ் 2 தேர்வு; மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோவில் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோ வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. கவர்னருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா: முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து
கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நேற்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. இதையொட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.