கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மாற்று சீருடை + "||" + Alternate uniform for Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணிக்கு மாற்று சீருடை

இந்திய கிரிக்கெட் அணிக்கு மாற்று சீருடை
இந்திய கிரிக்கெட் அணிக்கு மாற்று சீருடை வழங்கப்பட உள்ளது.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர மற்ற 9 அணிகளும் இருவிதமான நிறத்தில் சீருடையை வைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. மோதும் இரு அணிகளுக்கு ஏறக்குறைய ஒரே நிறத்தில் சீருடை இருந்தால் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் இருக்க ஒரு அணி வீரர்கள் மற்றொரு சீருடையை அணிந்து ஆடும்படி பணிக்கப்படுவார்கள்.


இந்த வகையில் இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்துக்கு எதிராக (ஜூன் 30-ந்தேதி) மோதும் போது வழக்கமான ஊதா நிறத்துக்கு பதிலாக ஊதா நிற பின்னணியில் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆட வேண்டி இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரிய மார்க்கெட்டிங் கமிட்டியின் மேற்பார்வையில் புதிய ஆரஞ்சு நிற சீருடை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களில் அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

‘டாஸ்’ போடும் வாய்ப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர்-வெளியூர் ஆட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அணி கேப்டனுக்கே ‘டாஸ்’ போடும் போது நாணயத்தை மேலே சுண்டி விடும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் அடிப்படையிலும் சீருடையில் வித்தியாசம் காட்டப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் 16-ந்தேதி நடக்கிறது
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 16-ந்தேதி நடக்கிறது.
2. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
3. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி ஆர்வம்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற விருப்பத்தை சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 2 ஆயிரம் விண்ணப்பங்கள்; யாருக்கு அதிக வாய்ப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. யாருக்கு அதிக வாய்ப்பு என விரைவில் தெரிய வரும்.
5. முகமது சமியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்த அமெரிக்கா
இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.