கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு + "||" + World Cup 2019 South Africa wins the toss and opts to bat

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு
உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீசுகிறது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி ஒரு வாரம் ஆன போதிலும் இன்னும் ஒரு அணி மட்டும் களம் காணாமல் உள்ளது. அது வேறு எந்த அணியும் அல்ல, நம்ம இந்தியா தான். 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி விட்டு தொடர்ந்து ஓய்வில் இருந்த இந்திய அணி இன்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும் தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வரிசையாக தோற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்தியா அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணி பெற்ற வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தியதையடுத்து, நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. வர்த்தக ரீதியாக இப்போதைக்கு இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை -அமெரிக்கா
வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
4. மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மோடி - இம்ரான் கான் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
5. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
இந்தியாவில் தற்கொலை பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.