துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:51 PM GMT (Updated: 5 Jun 2019 10:51 PM GMT)

இங்கிலாந்து ரசிகர்களை மிஞ்சும் வகையில் இந்திய ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இங்கிலாந்தை மிஞ்சும் இந்திய ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தாலும் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் வருகிற 30-ந்தேதி பர்மிங்காமில் நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. டிக்கெட் வாங்கியவர்களில் 55 சதவீதம் பேர் இந்தியர்கள். அதாவது 24,500 பேர் அமரக்கூடிய இந்த ஸ்டேடியத்தில் ஏறக்குறைய 13,500 பேர் இந்திய ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். இதே போல் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை பார்க்க டிக்கெட் வாங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் இந்திய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பயிற்சியாளர் புலம்பல்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹதுருசிங்கா அளித்த ஒரு பேட்டியில், ‘நாங்கள் விளையாடிய இரண்டு ஆடுகளங்களும் (பிட்ச்) ஒரு நாள் போட்டிகளுக்கு ஏற்றதாக இல்லை. மற்ற அணிகள் ஆடிய ஆடுகளங்களை பார்த்தால் கொஞ்சம் பிரவுன் அல்லது வெள்ளையாக கூட இருந்தது. எங்களுக்குரிய ஆடுகளங்கள் மட்டும் அதிக புற்களுடன் பச்சை பசேல் என்று காணப்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் நல்ல பிட்ச் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது’ என்றார்.

Next Story