கிரிக்கெட்

கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம் + "||" + Kohli to ICC Honor

கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம்

கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம் அளித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலியை ‘கிங்’காக சித்தரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த படத்தில் கோலி, கிரீடம் சூடியபடி கையில் பேட் மற்றும் பந்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். கோலிக்கு, ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ள அதே வேளையில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். உலக கோப்பைக்காக 10 அணிகள் மல்லுகட்டும் நிலையில், இந்திய கேப்டன் கோலி மீது மட்டும் ஐ.சி.சி. தனிக்கவனம் செலுத்துவது பாரபட்சமானது என்று பல ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.