கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து + "||" + World Cup Cricket Match: Winning the first match - Prime Minister congratulates Indian team

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் களம் இறங்கியதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த தொடர், நல்ல போட்டிகளையும், விளையாட்டு வீரர்களுக்குரிய உத்வேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமையட்டும். ஆட்டங்களில் வெல்லுங்கள்; ரசிகர்களின் இதயங்களையும் வெல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.