கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு + "||" + Australia vs West Indies Live Cricket Score, World Cup 2019: West Indies win toss, opt to bowl against Australia

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு

உலக கோப்பை கிரிக்கெட்:  வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டிரெண்ட் பிரிட்ஜ்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

அதிரடியால் வாணவேடிக்கை காட்டும் வீரர்களை அதிகம் கொண்ட வெஸ்ட் இண்டீஸ், அணிக்கும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலம் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஆட்டத்தில் அதிரடி ஜாலத்துக்கு குறைவு இருக்காது. அதுவும் அதிக ரன் குவிப்புக்கு பெயர் போன ஆடுகளத்தில் இந்த போட்டி அரங்கேறுவதால் ரன் குவிப்புக்கும் பஞ்சம் இருக்காது. நாட்டிங்காமில் இன்று மேக மூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடக்க கட்டத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

வெஸ்ட் இண்டீஸ்

கிறிஸ் கெயில், எவின் லெவிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரான், ஷிம்ரன் ஹெட்மெயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வெய்ட், ஆஸ்லே நர்ஸ், ஷேல்டன் காட்டர்ல், ஒஷேனே தாம்ஸ்,

ஆஸ்திரேலியா

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) , டேவிட் வார்னர், உஸ்மான் காவ்ஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளேன் மேக்ஸ்வேல், மார்கஸ் ஸ்டோயின்ஸ், அலெக்ஸ் கேரி , நாதன் கல்டர் நைல், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், அடம் சம்பா


தொடர்புடைய செய்திகள்

1. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.
2. உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
3. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு
நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.