கிரிக்கெட்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள் + "||" + World Cup 2019: MS Dhoni Sports Gloves With Army Insignia, Twitter Salutes

நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்
போட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சின்போது விக்கட் கீப்பர் தோனி தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக,  பாராமிலிட்டரி சிறப்பு படையின்  முத்திரை போன்ற வடிவம் இடம்பெற்றிருந்த கீப்பிங் கையுறயை பயன்படுத்தி விளையாடினார். தோனியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை அள்ளியுள்ளது. 

 கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் தோனி  பயிற்சியும் மேற்கொண்டார். ஆக்ரா பயிற்சியின் போது, பாராசூட்டில் 5 முறை குதித்து பயிற்சி மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில், ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். பிப்ரவரி 14 ஆம் தேதி  புல்வாமா தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
2. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
3. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
4. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.
5. ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.