கிரிக்கெட்

ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது எப்படி? பேட்ஸ்மேன்களுக்கு ஐடியா கொடுக்கும் பீட்டர்சன் + "||" + World Cup 2019: Kevin Pietersen's advice to tackle Jasprit Bumrah

ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது எப்படி? பேட்ஸ்மேன்களுக்கு ஐடியா கொடுக்கும் பீட்டர்சன்

ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது எப்படி? பேட்ஸ்மேன்களுக்கு ஐடியா கொடுக்கும் பீட்டர்சன்
ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது எப்படி? இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பீட்டர்சன் யோசனை தெரிவித்துள்ளார்.
லண்டன்,

உலக தரவரிசையில் நம்பர் 1 பந்து வீச்சாளராகவும், எத்திரணிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் விளங்கும், ஜஸ்பிரித் பும்ரா, நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்திலும், அனல் பறக்கப் பந்து வீசினார்.  

பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு பீட்டர்சன் யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான கெவின் பீட்டர்சன் தன் டுவிட்டர் பக்கத்தில், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் யோசனை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- “

அனைத்து வலது கை பேட்ஸ்மென்களுக்கும் ஒரு விரைவு மெமோ - பும்ரா வீசும் போது ஆப் ஸ்டம்புக்கு நகருங்கள், பின்னால் சென்று ஸ்கொயர் லெக்கில் அடிக்க முற்படுங்கள். ஆப் சைடில் விளையாடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
4. இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு
இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.
5. இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து
இரண்டு எண்ணெய் டேங்கர்களை, 23 பணியாளர்களுடன் ஈரான் பறிமுதல் செய்து உள்ளது. இதனால் இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் ஹார்முஸ் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து உள்ளது.