கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து + "||" + World Cup cricket England in strong position

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் ஆடி வருகிறது.
கார்டிப், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 12-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடியின் வலுவான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இதில் தனது அரைசததை பதிவு செய்த பேர்ஸ்டோ 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தற்போது இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

ஜாசன் ராய் 75 ரன்களுடனும், ஜோரூட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

இதே ரன் வேகத்தில் செல்லுமே ஆனால், இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 348 ரன்கள் குவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.