கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி + "||" + World Cup Cricket: New Zealand won by 7 wickets

உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
டவுன்டான்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும்  ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 13-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. இதற்கிடையே 2 முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.  


இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷகிடி 59(99) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்களும், பெர்குசன் 4 விக்கெட்களும், கிரான்ட்ஹோம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில், மார்டின் குப்தில், கொலின் முன்ரோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் குப்தில் சந்தித்த முதல் பந்திலே அவுட் ஆகி வெளியேற, அவரைத்தொடர்ந்து கொலின் முன்ரோ 22(24) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்ஸன், ரோஸ் டெய்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அந்த ஜோடியில் ரோஸ் டெய்லர் 48(52) ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய கேன் வில்லியம்சன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் கேன் வில்லியம்ஸன் 79(99) ரன்களும், டாம் லாதம் 13(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 32.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அப்டாப் ஆலம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பேட்டிங் செய்த போது எகிறி வந்த பந்து ஹெல்மெட்டோடு தாக்கி காயமடைந்தார். அந்த அதிர்வில் இருந்து மீளாததால் அவர் பந்துவீச வரவில்லை. இது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை பதம் பார்த்த நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றியாக (ஹாட்ரிக்) பதிவானது. ஆப்கானிஸ்தானுக்கு விழுந்த 3-வது அடியாகும். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இது அற்புதமான முயற்சி. அவர்களுக்கு தொடக்கம் (முதல் விக்கெட்டுக்கு 66 ரன் ) சிறப்பாக இருந்ததால், மிடில் ஓவர்களில் நெருக்கடி கொடுப்பது முக்கியமானதாக இருந்தது. அதை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செய்து முடித்தனர். தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் ‘சேசிங்’ செய்து வெற்றி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.


ஆசிரியரின் தேர்வுகள்...