கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது + "||" + The ICC's request was accepted by the Indian Cricket Board

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது
ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.
மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) உபயோகப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட லோகோவை பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தியது.


இந்த நிலையில் ஐ.சி.சி.யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘ஐ.சி.சி.யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பது தான் எங்களது நிலைப்பாடு. விதிமுறைகளை நாங்கள் மீறமாட்டோம். நாங்கள் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேசம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டம் குறித்த அவதூறுகளை நம்ப வேண்டாம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
குடியுரிமை சட்டம் குறித்த அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
திருச்சி மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு, கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் ; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. ஐ.சி.சி.யின் முடிவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு
ஐ.சி.சி.யின் முடிவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
5. சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்
சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.