கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை + "||" + Rohit Sharma and Shikhar Dhawan set the record for the highest score against Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

* உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். 1999-ம் ஆண்டு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஜய் ஜடேஜா சதம் (100 ரன்) அடித்திருந்தார்.


* இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 4-வது வீரராக இணைந்தார். அதே சமயம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய சிறப்பு அவர் வசம் ஆனது. ரோகித் சர்மா 37 இன்னிங்சில் 2,037 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களுக்கு மேலாக எடுத்த மற்ற வீரர்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (3,077 ரன்), வெஸ்ட் இண்டீசின் தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் (2,262 ரன்), விவியன் ரிச்சர்ட்ஸ் (2,187 ரன்) ஆகியோர் ஆவர்.

* ஐ.சி.சி. நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் (உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் தெண்டுல்கர், கங்குலி (தலா 7 சதம்) முதலிடத்தில் உள்ளனர். 2-வது இடத்தை ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோருடன் ஷிகர் தவான் (தலா 6 சதம்) பகிர்ந்துள்ளார். தவான் உலக கோப்பையில் 3 சதமும், சாம்பியன்ஸ் கோப்பையில் 3 சதமும் அடித்துள்ளார்.

* தவான்-ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் திரட்டியது. ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் தவான்-ரோகித் சர்மா இணையின் 6-வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்- ஹைடன் ஜோடியின் சாதனையை (இவர்களும் 6 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்) சமன் செய்தனர்.

* உலக கோப்பை தொடரில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 10-வது முறையாகும். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* தவானும், ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கூட்டாக 1,273 ரன்கள் (22 இன்னிங்ஸ்) சேர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேறு எந்த ஜோடியும் இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை. வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ்-தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடியின் 1,152 ரன்கள் (29 இன்னிங்ஸ்) சாதனை முறியடிக்கப்பட்டது.

* உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 89 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்தியாவின் ரோகித் சர்மா- ஷிகர் தவான் (தற்போதைய ஆட்டம்), இங்கிலாந்தின் கிரஹாம் கூச்-இயான் போத்தம் (1992-ம் ஆண்டு), தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்- கிரேமி சுமித் (2007-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.