கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேசம் ஆட்டம் மழையால் ரத்து + "||" + World Cup cricket Sri Lanka - Bangladesh match canceled by rain

உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேசம் ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேசம் ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
பிரிஸ்டல், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது.

மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. இந்நிலையில், பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி  கைவிடப்பட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.