கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை என்ன? + "||" + World Cup Cricket: What is the rules that are followed when rainfall is affected?

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை என்ன?

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை என்ன?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘வருணபகவான்’ அடிக்கடி புகுந்து சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறார். நடப்பு தொடரில் இதுவரை 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது. மேலும் சில ஆட்டங்களில் மழை தாக்கத்திற்கு இடையே முடிவு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள வானிலையை பொறுத்தவரை உலக கோப்பை தொடர் முழுவதுமே மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது. இதனால் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் எரிச்சலுக்குள்ளாகி இருக்கிறார்கள்.


இதே சீதோஷ்ண நிலை தொடர்ந்தால், லீக் சுற்று முடிவில் சில அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரைஇறுதி, இறுதிப்போட்டியிலும் இதே நிலை நீடித்தால் என்ன செய்வார்கள்? என்ற குழப்பம் வருகிறது அல்லவா?. அதற்கான விடை இது தான்.

* லீக் சுற்று முடிவில் டாப்-4 பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதி வாய்ப்புக்குரிய அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தால் லீக் சுற்றில் யார் அதிக வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். அதிலும் சமநிலை நீடித்தால் ரன்-ரேட் கணக்கிட்டு முன்னுரிமை வழங்கப்படும். அதுவும் சமனாக இருக்கும் பட்சத்தில், அவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் யார் அதிக வெற்றி பெற்றார்கள் என்று பார்ப்பார்கள். ஒரு வேளை இந்த மூன்று விஷயங்களும் ஒரே மாதிரி சமனாக இருந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக தரவரிசையில் யார் முன்னிலை பெற்றிருந்தார்கள் என்பதன் அடிப்படையில் அரைஇறுதி அணி தேர்வாகும்.

* லீக் சுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) கிடையாது. ஆனால் லீக் சுற்று ஆட்டத்தின் போது மழையால் தாமதம் ஆனால் காலநேரத்தை நீட்டிக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.

* அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ‘ரிசர்வ் டே’ வைக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.

* அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

* அரைஇறுதி ஆட்டத்தை மழையால் கைவிட வேண்டிய சூழ்நிலை வந்தால், லீக் சுற்றில் முன்னிலை வகித்த அணிக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் அடிக்கும்.

* இறுதி ஆட்டம் இரண்டு நாளும் மழையால் தடைப்பட்டால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.


தொடர்புடைய செய்திகள்

1. குமரி மாவட்டத்தில் மழை: பெருஞ்சாணி அணை பகுதியில் 76 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருஞ்சாணி அணை பகுதியில் 76 மி.மீ. மழை பதிவானது.
2. தாளவாடி அருகே விடிய விடிய கொட்டி தீர்த்த மழை தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
4. பள்ளிப்பட்டு அருகே சாலையில் வேருடன் சரிந்து விழுந்த ஆலமரம் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பட்டு அருகே சாலையில் வேருடன் ஆலமரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.