கிரிக்கெட்

மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கும் மாற்று நாள் ஒதுக்குவது முடியாத காரியம் - ஐ.சி.சி. அறிவிப்பு + "||" + World Cup reserve days for rain extremely complex to deliver ICC chief

மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கும் மாற்று நாள் ஒதுக்குவது முடியாத காரியம் - ஐ.சி.சி. அறிவிப்பு

மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கும் மாற்று நாள் ஒதுக்குவது முடியாத காரியம் - ஐ.சி.சி. அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கும் மாற்று நாள் ஒதுக்குவது முடியாத காரியம் என ஐசிசி அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.  இலங்கை–பாகிஸ்தான், இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது. தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்களில் மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நடப்பு உலக கோப்பை போட்டியில் தான். 

மழையால் ரத்து செய்யப்படும் லீக் ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) எதுவும் கிடையாது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு. லீக் சுற்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் அளிக்க வேண்டும் என்று வங்காளதேச அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உள்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்களுக்கு மாற்று நாள் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. 

மாற்றுநாள் என்றால் போட்டியின் கால அளவு கணிசமாக அதிகரித்து விடும். இதனை நடைமுறைபடுத்துவது என்பது மிகவும் சிக்கலானதாகும். கூடுதல் ஆட்கள் தேவைப்படும். மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வருசநாடு பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி
வருசநாடு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. கல்வராயன்மலையில் கன மழை: சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் மண் சரிவு; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அதிகபட்சமாக கொட்டாரத்தில் 127 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் கொட்டாரத்தில் அதிகபட்சமாக 127 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
4. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. மாவட்டத்தில் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி யடைந்தனர்.