கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும்? -கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கணிப்பு + "||" + In Sundar Pichai's Prediction For World Cup Final, India And...

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும்? -கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கணிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும்? -கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கணிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவை என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
வாஷிங்டன்,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டு  விளையாடுவதால், இந்தத் தொடர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக நகர்கிறது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை  கணித்துள்ளார்.

வாஷிங்டன்னில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சையிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை,  இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என தான் நினைப்பதாக கூறினார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.