கிரிக்கெட்

வருண பகவானே... மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் -கேதர் ஜாதவ் உருக்கம் + "||" + What a gesture by JadhavKedar He wants to rain in Maharashtra

வருண பகவானே... மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் -கேதர் ஜாதவ் உருக்கம்

வருண பகவானே... மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் -கேதர் ஜாதவ் உருக்கம்
வருண பகவானே... தண்ணீர் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் என கேதர் ஜாதவ் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருந்தன. நாட்டிங்காமில் நடைபெற இருந்த இந்தப் போட்டி டாஸ் கூட போட முடியாமல் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மைதானத்தில் நின்றிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வருண பகவானே... தண்ணீர் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல். அங்கு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை. நாடிங்ஹாமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக வறட்சியாக இருக்கும் மகாராஷ்டிராவில் கொட்டித்தீர்" எனக் கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் இந்த முறை வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. தற்போது அங்கு  கடுமையான தண்ணீர்  தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கேதர் ஜாதவ்வின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் புனே ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. மழை காரணமாக இந்தியா-நியூசிலாந்து போட்டி தடைபட்டால் யாருக்கு சாதகம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து போட்டி மழை காரணமாக தடைபட்டால் நியூசிலாதுக்கு சாதகமாக அமையும் என தெரிகிறது.
3. விராட் கோலியின் சொகுசு கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் ரூ. 500 அபராதம்
விராட் கோலியின் சொகுசு கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
4. டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை : ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்
டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
5. கிரிக்கெட் வீரர் மர்ம கும்பலால் கத்தியால் குத்தி கொலை
மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.