கிரிக்கெட்

அதிவிரைவில் ஒருநாள் போட்டியில் 11,000 ரன்கள் - விராட் கோலி உலக சாதனை + "||" + India vs Pakistan World Cup 2019 Virat Kohli becomes the fastest to 11000 ODI runs

அதிவிரைவில் ஒருநாள் போட்டியில் 11,000 ரன்கள் - விராட் கோலி உலக சாதனை

அதிவிரைவில் ஒருநாள் போட்டியில் 11,000 ரன்கள் - விராட் கோலி உலக சாதனை
அதிவிரைவில் ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை எடுத்து விராட் கோலி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பாக ஆடியது. 

இந்திய அணி 5 விக்கெட்களை எடுத்து 336 ரன்களை எடுத்து பாகிஸ்தானுக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 140 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடைய கைகோர்த்து விளையாடிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வீராட் கோலி 77 ரன்களை எடுத்தார். போட்டியில் விராட் கோலி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  ஹசன் அலி ஓவரில் பவுண்டரி அடித்து கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 11,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் அதி சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரை  பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 11,000 ரன்களை எடுத்ததை காட்டிலும் 54 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டார். 
 
சச்சின் 276 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டி சாதனையை வைத்திருந்தார். இப்போது அதனை முறியடித்துள்ள  விராட் கோலி 222 போட்டிகளில் அதனை எட்டியுள்ளார்.  ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களையும் சவுரவ் கங்குலி 288 இன்னிங்ஸ்களிலும் 11,000 ரன்களையும் எடுத்துள்ளனர். இவர்களை மிகவும் பின்தங்கச் செய்துள்ளார் விராட் கோலி.