கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் இன்று மோதல் + "||" + World Cup Cricket: West Indies-Bangladesh clash today

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இன்று மோத உள்ளன.
டவுன்டான்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டவுன்டானில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 23-வது லீக் ஆட்டத்தில் மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஒரே மாதிரி 4 ஆட்டத்தில் விளையாடி 3 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை) உள்ளன. இந்த ஆட்டத்தின் முடிவு அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்வதற்கு முக்கியமானதாகும். எனவே இரு அணி வீரர்களும் சரிவில் இருந்து மீள்வதற்கு கடுமையாக முயற்சிப்பார்கள். கடந்த மாதம் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வங்காளதேசம் தொடர்ச்சியாக மூன்று முறை வீழ்த்தி பிரமாதப்படுத்தியது. இதனால் வங்காளதேச வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துடன் ஒரு போதும் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைக்க போராடும்.


இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் 316 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா ‘திரில்’ வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
கட்டாக்கில் நேற்றிரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 316 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றதோடு தொடரையும் வசப்படுத்தியது.
2. இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகியுள்ளார்.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
5. ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.